2026 இலும் தொடரும் பாடசாலை மாணவிகளுக்கான வேலைத்திட்டம்

வயது வந்த பாடசாலை மாணவிகளின் கல்வி நடவடிக்கைகள்..........

Published March 24, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

வயது வந்த பாடசாலை மாணவிகளின் கல்வி நடவடிக்கைகள் தடையின்றி தொடர்வதை உறுதிப்படுத்தும் நோக்கில், இந்த ஆண்டிலும் அவர்களுக்கு இலவச சுகாதார அணையாடை  (Sanitary Napkins) வழங்கும் திட்டத்தை தொடர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் சமர்ப்பித்த இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஒவ்வொரு மாணவிக்கும் தலா 720 ரூபாய் பெறுமதியான இரண்டு பரிசுச் சீட்டுகள் (Gift Certificates) வழங்கப்படும். இதன் மூலம் ஒரு மாணவிக்கு வருடாந்தம் 1,440 ரூபாய் பெறுமதியான வவுச்சர்கள் கிடைக்கப்பெறும்.

இந்த வவுச்சர்களைப் பயன்படுத்தி மாணவிகள் தமக்குத் தேவையானசுகாதார சுகாதார அணையாடைகளை கொள்வனவு செய்ய முடியும்.(உதாரணமாக, 120 ரூபாய் பெறுமதியான 12 பக்கெட்டுகள் அல்லது 180 ரூபாய் பெறுமதியான 8 பக்கெட்டுகள் வரை பெற்றுக்கொள்ளலாம்).

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *