லெபனான் மீதான தரைவழித் தாக்குதல் : கனடா எச்சரிக்கை
லெபனானைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டங்களை கனடா............
Published March 25, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
லெபனானைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டங்களை கனடா “கடுமையாகக் கண்டிப்பதாக” AFP செய்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டி அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் பாரிய தரைவழி ஆக்கிரமிப்பை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள நிலையில், லெபனானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு “மீறப்படக்கூடாது” என்று கனடா எச்சரித்துள்ளது.
லெபனானின் தெற்கு எல்லையில் 30 கிலோமீட்டர் (18.6 மைல்) வரையிலான பகுதியை ஆக்கிரமித்து ஆளுவதற்கு இஸ்ரேல் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மார்ச் மாத ஆரம்பத்திலிருந்து இஸ்ரேலியத் தாக்குதல்களால் லெபனானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 1,072 ஆக உயர்ந்துள்ளதுடன், சுமார் 3,000 பேர் காயமடைந்துள்ளனர்.