பங்களாதேஷிற்கு செல்லும் இலங்கை மகளிர் அணி
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி எதிர்வரும் ஏப்ரல் மாதம் ............
Published March 25, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி எதிர்வரும் ஏப்ரல் மாதம் பங்களாதேஷிற்கு உத்தியோகபூர்வ கிரிக்கெட் சுற்றுப்பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான கிரிக்கெட் உறவுகளை வலுப்படுத்தும் நோக்கோடும், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இலங்கை வீராங்கனைகளின் திறமைகளை மெருகேற்றும் வகையிலும் இந்தச் சுற்றுப்பயணம் அமையவுள்ளது.
இந்தச் சுற்றுப்பயணத்தின் போது நடைபெறவுள்ள போட்டிகளின் விபரங்கள், மைதானங்கள் மற்றும் அட்டவணை என்பன வரும் நாட்களில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.