சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
தடுப்புக் காவலில் உள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...........
Published March 25, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
தடுப்புக் காவலில் உள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுரேஷ் சலே தற்போது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பொறுப்பில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.
எவ்வாறாயினும், அவரது உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காகக் குடும்ப உறுப்பினர்கள் அனுமதி கோரியிருந்த போதிலும், அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.