ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்
ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி வலையமைப்பில் ...........
Published March 26, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி வலையமைப்பில் ஏற்பட்டுள்ள பாரிய தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, நாளை முதல் திணைக்களத்தின் அனைத்துப் பொதுச் சேவைகளும் காலவரையறையின்றி இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 1.30 மணியளவில் கணினித் தொகுதியில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, ஆட்களைப் பதிவு செய்யும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன்காரணமாக பத்தரமுல்லையில் உள்ள ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் அனைத்து மாகாண அலுவலகங்களிலும் ஒருநாள் சேவை உள்ளிட்ட பொதுச் சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.