அமைச்சர் குமார ஜயக்கொடியிடம் குற்றப்பத்திரிகை கையளிப்பு

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் வலுசக்தி அமைச்சர் குமார............

Published March 27, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டதாக ‘அத தெரண’ செய்தியாளர் தெரிவித்தார். 

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த தொடவெல முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

முன்னதாக விடுக்கப்பட்டிருந்த அழைப்பாணைக்கு அமைய, பிரதிவாதியான அமைச்சர் குமார ஜயக்கொடி நீதிமன்றத்தில் இன்று காலை முன்னிலையாகியிருந்தார். 

குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டதன் பின்னர், தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அவருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. 

அத்துடன், அவரது விரல் அடையாளங்களைப் பெற்று அது குறித்த அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers Breaking and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *