அலங்கார தாவரங்களை கடத்தியவர் கைது

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில்.........

Published March 27, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட உயிருள்ள அலங்காரத் தாவரங்களுடன் பயணி ஒருவர் இன்று அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 

2 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய இந்தத் தாவரங்களுடன், சந்தேகநபர் வெளியேற முயன்றபோதே கைது செய்யப்பட்டுள்ளார். 

கண்டியைச் சேர்ந்த 57 வயதுடைய இந்தச் சந்தேகநபர், இன்று அதிகாலை 12.30 மணியளவில் நாட்டை வந்தடைந்துள்ளார். 

அவர் கொண்டு வந்த பயணப் பொதியில் காகிதங்களால் சுற்றப்பட்ட நிலையில் இந்த அலங்காரத் தாவரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

இந்தத் தாவரங்களை இலங்கைக்குக் கொண்டு வருவதற்கு அவரிடம் முறையான இறக்குமதி அனுமதிப்பத்திரமோ அல்லது தாவர சுகாதார பாதுகாப்பு சான்றிதழோ இருக்கவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

இது தொடர்பாக முறையான சுங்க விசாரணைகளை மேற்கொண்ட கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள், கைப்பற்றப்பட்ட தாவரங்களை அழிப்பதற்காக கட்டுநாயக்க தாவர தனிமைப்படுத்தல் நிலையத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *