இளம்பெண்ணுக்கு நீதி கோரி சாணக்கியன் எம்.பி தலைமையில் திரண்ட மக்கள்

இன்று மட்டக்களப்பில் கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணுக்கு நீதி.......

Published March 27, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 3 min read

இன்று மட்டக்களப்பில் கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணுக்கு நீதி கோரி காந்திப்பூங்காவில் நடைபெற்ற அமைதியான கண்டனப் பேரணியில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கலந்து கொண்டுள்ளார் .இந்தப் பேரணியில் பொதுமக்களும்,பாதிக்கப்பட்ட குடும்பத்தின் உறவினர்களும் பெரும் வேதனையுடன்
இணைந்திருந்தனர்.

பொலிசார் குற்ற நடவடிக்கைகள் தொடர்பில் உடனடி நடவடிக்கைஎடுக்க வேண்டும் இவ்வாறான பாரிய குற்றங்கள் இடம் பெறாமல் தடுக்க முடியும்.

இந்தச் சம்பவம் ஒரு குடும்பத்தின் துயரமாக மட்டுமல்ல, முழு சமூகத்தின் மனதை உலுக்கும் ஒரு அநீதி என்றும் நீதி
கிடைக்கும் வரை இந்தக் குரல் மௌனமாக மாறாது என்பதையும் என்பதை வலியுறுத்தியுள்ளார் . பின்னர், காந்திப்பூங்காவிலிருந்து பழைய கச்சேரி வரை பேரணியாகச் சென்று,மாவட்ட செயலாளரை நேரில் சந்தித்து, சம்பவத்துடன் தொடர்புடைய பிரச்சினைகள் மற்றும் உறவினர்களின் கோரிக்கைகளைமுன்வைத்துள்ளனர் .

அதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினராகிய சாணக்கியன் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திற்கும் நான் அழைத்துச் சென்றுள்ளார் .

இந்தச் சம்பவத்திற்கு உடனடி மற்றும் நியாயமான விசாரணை நடைபெற்று, குற்றவாளிகள் சட்டத்தின் முன் கொண்டுவரப்பட வேண்டும் என்பது இவரின் வலியுறுத்தலாகும் .

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் :-

‘இந்த மண்ணில் ஒரு உயிர் அநியாயமாக பறிக்கப்படும் ஒவ்வொரு தருணத்திலும்,நாம் எல்லோரும் பொறுப்பு உடையவர்களாகிறோம். ஆகவே, நீதி நிலைநிறுத்தப்படும் வரை, உண்மை வெளிச்சத்திற்கு வரும் வரை, எமது குரல் மௌனமாக இருக்காது. நீதிக்காக ஒன்றுபடுவோம். மனிதத்துவத்தை காப்போம் ‘ என தெரிவித்துள்ளார் .

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *