எரிபொருளை பதுக்கி வைத்திருந்தவர்கள் கைது
நாட்டின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில்............
Published March 27, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
நாட்டின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில், சட்டவிரோதமான முறையில் எரிபொருளைச் சேமித்து வைத்திருந்த மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று நீர்கொழும்பு, புதுக்குடியிருப்பு மற்றும் ஹிங்குராக்கொட ஆகிய பொலிஸ் பிரிவுகளில் குறித்த சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர்.
நீர்கொழும்பு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, மீன்பிடி படகு ஒன்றில் அனுமதிப்பத்திரமின்றி 1050 லீற்றர் டீசலை வைத்திருந்த 57 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவங்கள் தொடர்பாக அந்தந்த பொலிஸ் நிலையங்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.