இலங்கையின் டிஜிட்டல் அடையாள அட்டைத் திட்டம்
இலங்கையின் தேசிய டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை .......
Published March 29, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இலங்கையின் தேசிய டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை கட்டம் கட்டமாக அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
முதற்கட்டமாக அடிப்படை உள்கட்டமைப்புகளை உருவாக்குதல் மற்றும் பாதுகாப்பான அடையாளச் சான்றுகளை வழங்குதல் போன்ற பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான பிரதி அமைச்சர் எராங்க வீரரத்ன இது குறித்துத் தெரிவிக்கையில், இந்த ஆண்டின் (2026) மூன்றாவது அல்லது நான்காவது காலாண்டுக்குள் முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.