LATEST
மாகாண சபை, உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு அதிக வாய்ப்பு!பலத்த காற்று எச்சரிக்கை! கடல் கொந்தளிப்பு தீவிரம் – மக்களுக்கு அவசர அறிவிப்பு!தமிழ் – முஸ்லிம் கட்சிகள் ஒரே மேசையில்; கொழும்பில் முக்கிய ஆலோசனை!நெல்லை ரூ.150க்கு வாங்கினால்… அரிசியை எவ்வளவு ரூபாய்க்கு விற்பீர்கள்?’ – நாமல் கருணாரத்ன!நீதிமன்றத்தில் ஆஜராகாத விமல் வீரவங்ச; வழக்கில் புதிய திருப்பம்!அமெரிக்கா – ஈரான் பதற்றம் தீவிரம்; உலக எண்ணெய் விலை திடீர் உயர்வு!ஒரே நாளில் ரூ.21 லட்சம் அபராதம் விதித்த நுகேகொட நீதிமன்றம்!ஈரானின் முக்கிய நகரங்கள் மீது அமெரிக்காவின் அதிரடி தாக்குதல்!மாகாண சபை, உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு அதிக வாய்ப்பு!பலத்த காற்று எச்சரிக்கை! கடல் கொந்தளிப்பு தீவிரம் – மக்களுக்கு அவசர அறிவிப்பு!தமிழ் – முஸ்லிம் கட்சிகள் ஒரே மேசையில்; கொழும்பில் முக்கிய ஆலோசனை!நெல்லை ரூ.150க்கு வாங்கினால்… அரிசியை எவ்வளவு ரூபாய்க்கு விற்பீர்கள்?’ – நாமல் கருணாரத்ன!நீதிமன்றத்தில் ஆஜராகாத விமல் வீரவங்ச; வழக்கில் புதிய திருப்பம்!அமெரிக்கா – ஈரான் பதற்றம் தீவிரம்; உலக எண்ணெய் விலை திடீர் உயர்வு!ஒரே நாளில் ரூ.21 லட்சம் அபராதம் விதித்த நுகேகொட நீதிமன்றம்!ஈரானின் முக்கிய நகரங்கள் மீது அமெரிக்காவின் அதிரடி தாக்குதல்!
உள்ளூர்

தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம் ஆரம்பம்

April 6, 2026 · Tamil Ceylon LK

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல்கல்லாக, “தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்” ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

டிஜிட்டல் கொடுப்பனவுகளை ஊக்குவிக்கும் நோக்கில், 5,000 ரூபாய் வரையான லங்கா கியூஆர் (LankaQR) கொடுக்கல் வாங்கல்களுக்காக வர்த்தகர்களிடம் அறவிடப்படும் சேவைக்கட்டணம் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.

இது சில்லறை வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் மத்தியில் டிஜிட்டல் பரிமாற்றங்களை அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது 20-க்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்களின் ஆதரவுடன், நாடு முழுவதும் 450,000 வர்த்தக இடங்களில் LankaQR வசதி நடைமுறையில் உள்ளது.

நாட்டில் தற்போது 1.48 டிரில்லியன் ரூபாய் பெறுமதியான நாணயத்தாள்கள் மற்றும் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன. இந்தத் தொகையைக் குறைத்து, ‘ நாணயத்தாளற்ற பொருளாதாரத்தை உருவாக்குவதே இத்திட்டத்தின் பிரதான இலக்காகும்.

QR கொடுப்பனவு முறையை வலுப்படுத்துவதற்காக தமிழ் , சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தேசிய அளவிலான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

Related Stories

மேலும் ›