LATEST
தொடரும் மர்ம ம#ரணங்கள் குறித்து உண்மையை வெளிப்படுத்துங்கள்!” – மனோ கணேசன்டெங்கு அச்சம் தீவிரம்! நோயாளிகள் 76,044 ஆக உயர்வுஇரண்டாவது முறையாக கோல்டன் பூட் வென்ற எம்பாப்பே!மெஸ்ஸியின் கனவை தகர்த்த ஸ்பெயின்! உலகக் கோப்பை கைப்பற்றியது“NPP-யை தோற்கடிக்க தெய்வீக சக்தி வேண்டும்!” – அருணா ஜெயசேகரஈராக்கில் ஆளில்லா விமானத் தாக்குதல்: அமெரிக்க வீரர் பலி மற்றும் ஒருவர் காயம்!நாட்டின் பல பகுதிகளுக்கு மழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை!கம்பஹா, கொழும்பில் டெங்கு அபாயம் தீவிரம்!தொடரும் மர்ம ம#ரணங்கள் குறித்து உண்மையை வெளிப்படுத்துங்கள்!” – மனோ கணேசன்டெங்கு அச்சம் தீவிரம்! நோயாளிகள் 76,044 ஆக உயர்வுஇரண்டாவது முறையாக கோல்டன் பூட் வென்ற எம்பாப்பே!மெஸ்ஸியின் கனவை தகர்த்த ஸ்பெயின்! உலகக் கோப்பை கைப்பற்றியது“NPP-யை தோற்கடிக்க தெய்வீக சக்தி வேண்டும்!” – அருணா ஜெயசேகரஈராக்கில் ஆளில்லா விமானத் தாக்குதல்: அமெரிக்க வீரர் பலி மற்றும் ஒருவர் காயம்!நாட்டின் பல பகுதிகளுக்கு மழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை!கம்பஹா, கொழும்பில் டெங்கு அபாயம் தீவிரம்!
உள்ளூர்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நீண்ட வாகன வரிசை!

April 15, 2026 · Tamil Ceylon LK

தெற்கு அதிவேக வீதியின் காலி, பின்னதுவ நுழைவாயிலில் இன்று (15) நீண்ட வாகன வரிசைகளைக் காணமுடிந்ததாக ‘அத தெரண’ செய்தியாளர் தெரிவித்தார். 

அதிவேக வீதியிலிருந்து வெளியேறுவதற்கும் உள்ளே பிரவேசிப்பதற்கும் அவ்வப்போது மிக நீண்ட வாகன வரிசைகள் காணப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டுத் தமது சொந்த இடங்களுக்குச் சென்ற பயணிகளின் வசதிக்காக, இன்று (15) முதல் மேலதிக பேருந்துகளைச் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது குறித்து அனைத்து மாகாண போக்குவரத்து அதிகாரசபைகளுக்கும் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் ஷெரின் அத்துகோரள குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், இன்று (15) ஒரு சாதாரண அலுவலக நாள் என்பதால், அலுவலக ரயில்களை வழக்கம் போல் இயக்குவதற்கு ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது. பயணிகளின் தேவையைக் கருத்திற்கொண்டு அந்தந்த ரயில்கள் சேவையில் இணைக்கப்படும் என ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் அசங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.

Related Stories

மேலும் ›