LATEST
தொடரும் மர்ம ம#ரணங்கள் குறித்து உண்மையை வெளிப்படுத்துங்கள்!” – மனோ கணேசன்டெங்கு அச்சம் தீவிரம்! நோயாளிகள் 76,044 ஆக உயர்வுஇரண்டாவது முறையாக கோல்டன் பூட் வென்ற எம்பாப்பே!மெஸ்ஸியின் கனவை தகர்த்த ஸ்பெயின்! உலகக் கோப்பை கைப்பற்றியது“NPP-யை தோற்கடிக்க தெய்வீக சக்தி வேண்டும்!” – அருணா ஜெயசேகரஈராக்கில் ஆளில்லா விமானத் தாக்குதல்: அமெரிக்க வீரர் பலி மற்றும் ஒருவர் காயம்!நாட்டின் பல பகுதிகளுக்கு மழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை!கம்பஹா, கொழும்பில் டெங்கு அபாயம் தீவிரம்!தொடரும் மர்ம ம#ரணங்கள் குறித்து உண்மையை வெளிப்படுத்துங்கள்!” – மனோ கணேசன்டெங்கு அச்சம் தீவிரம்! நோயாளிகள் 76,044 ஆக உயர்வுஇரண்டாவது முறையாக கோல்டன் பூட் வென்ற எம்பாப்பே!மெஸ்ஸியின் கனவை தகர்த்த ஸ்பெயின்! உலகக் கோப்பை கைப்பற்றியது“NPP-யை தோற்கடிக்க தெய்வீக சக்தி வேண்டும்!” – அருணா ஜெயசேகரஈராக்கில் ஆளில்லா விமானத் தாக்குதல்: அமெரிக்க வீரர் பலி மற்றும் ஒருவர் காயம்!நாட்டின் பல பகுதிகளுக்கு மழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை!கம்பஹா, கொழும்பில் டெங்கு அபாயம் தீவிரம்!
உள்ளூர்

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு, புதுக்குடியிருப்பு டொல்பின் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் கலாசார விளையாட்டு விழா..!

April 19, 2026 · Tamil Ceylon LK

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு, புதுக்குடியிருப்பு டொல்பின்விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் கலாசார விளையாட்டு விழா நேற்று (18.04.2026 – சனிக்கிழமை) பிற்பகல் மிக விமர்சையாக நடைபெற்றது.நிகழ்வின் ஆரம்பத்தில், அதிதிகள் பாரம்பரிய முறையில் வரவேற்கப்பட்டனர்.தொடர்ந்து மங்கள விளக்கேற்றல், இறை வணக்கம் மற்றும் கழகக் கீதம் இடம்பெற்றன. பின்னர் வரவேற்புரை, ஆசியுரை மற்றும் தலைமையுரை ஆகியவை நடைபெற்றன.

மக்களின் உற்சாகமான கரகோஷங்களுக்கு மத்தியில் பல்வேறு கலாசாரவிளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் பெறுமதியான பரிசுகள் அதிதிகளினால்வழங்கப்பட்டன.இறுதியாக, அதிதிகளின் நிறைவு உரைகளும் நன்றியுரையும் இடம்பெற்று விழாஇனிதே நிறைவுற்றது.இந்நிகழ்வில் முதன்மை அதிதிகளாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன்இராசமாணிக்கம், ஞானமுத்து சிறிநேசன், வைத்தியர் இளையதம்பி சிறிநாத்அவர்களும், சிறப்பு அதிதிகளாக மண்முனை பிரதேச சபைத் தவிசாளர் திரு. கா.செந்தில்குமார், மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரி அதிபர் திரு. ம.சோமசூரியம், கிழக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்கள மாகாணப் பொறியியலாளர்திரு. சு. சுகிஷன், புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய அதிபர்திரு. அ. குலேந்திரராசா அவர்களும் கலந்து கொண்டனர்.

மேலும், மண்முனை பிரதேச சபை உறுப்பினர்களான திரு. வே. சிவப்பிரகாசம்,திரு. மு. கிருபேந்திரன் அவர்களுடன் ஆலய நிர்வாகிகள், அரச அதிகாரிகள்,சமூக ஆர்வலர்கள், டொல்பின் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், சமூக மட்டஅமைப்புகளின் பிரதிநிதிகள், ஊர் பிரமுகர்கள், நலன் விரும்பிகள் மற்றும்பெருமளவிலான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

Related Stories

மேலும் ›