LATEST
அரசியலமைப்பு திருத்தத்திற்கு மக்கள் அங்கீகாரம் வேண்டும்!சஜித்துக்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு!வடக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த காற்று வீசும் அபாயம்!ஹம்பாந்தோட்டையில் தேங்கிய 1,025 இறக்குமதி வாகனங்கள்!இலங்கை பொலிஸில் 383 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் கோரல்!டெங்கு வேகமாக பரவுகிறது – மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுகோள்!கொழும்பு பொது நூலகத்தில் சிறப்பு விருந்தினராக சசி தரூர்!கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார்!அரசியலமைப்பு திருத்தத்திற்கு மக்கள் அங்கீகாரம் வேண்டும்!சஜித்துக்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு!வடக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த காற்று வீசும் அபாயம்!ஹம்பாந்தோட்டையில் தேங்கிய 1,025 இறக்குமதி வாகனங்கள்!இலங்கை பொலிஸில் 383 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் கோரல்!டெங்கு வேகமாக பரவுகிறது – மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுகோள்!கொழும்பு பொது நூலகத்தில் சிறப்பு விருந்தினராக சசி தரூர்!கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார்!
உள்ளூர்

மலையக ரயில் பாதையை மீளமைக்க துரித நடவடிக்கை – களத்தில் இறங்கிய அதிகாரிகள்!

May 6, 2026 · Tamil Ceylon LK

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன, ‘டிட்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான சேதங்களை அடுத்து, மலையக தொடருந்து பாதையை மீளமைக்கும் பணிகளின் முன்னேற்றத்தை பார்வையிடுவதற்கான கள விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

போக்குவரத்து அமைச்சின் தகவலின்படி, மலையக தொடருந்து பாதையை மீளமைப்பதற்கான பொறியியல் விசாரணைகள் மற்றும் வடிவமைப்புப் பணிகளை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) முன்னெடுத்து வருகிறது.

இந்த அனர்த்தத்தின் காரணமாக மருதானை முதல் பேராதனை வரையான பிரதான பாதையில் மண்சரிவுகள், மண் அரிப்பு, பாறைகள் சரிதல், பாலங்கள் மற்றும் மதகுகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் உள்ளிட்ட 97 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இவற்றில், 92 இடங்கள் தொடருந்து திணைக்களத்தின் முயற்சியால் ஏற்கனவே மீளமைக்கப்பட்டுள்ளதுடன், ரம்புக்வெல்ல மற்றும் கடுகன்னாவ ஆகிய இடங்களுக்கு இடைப்பட்ட ஐந்து இடங்களில் தொடர்ந்தும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

மீளமைப்புப் பணியின் சிக்கலான தன்மைகளைக் கையாள்வதற்கும், உட்கட்டமைப்பின் நீண்டகால ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் விசேட பொறியியல் ஆய்வுகளை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்டு வருவதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related Stories

மேலும் ›