LATEST
இடியுடன் கூடிய மழை – அவதானமாக இருக்க அறிவுறுத்தல்!உர மோசடி விவகாரம் – அவசர விசாரணை கோரிக்கை!அப்துல் வாஹித் எம்.பி பதவி விலகினார் – தேர்தல் ஆணையத்துக்கு அறிவிப்பு!குருநாகல் மாவட்டத் தலைவராக ஜெயரத்ன ஹெரத் நியமனம்!விமான கொள்முதல் முறைகேடு – நாமல் ராஜபக்ஷவுக்கு புதிய சிக்கல்!தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாடு – எரிபொருள் நிலையங்கள் பாதிப்பு!இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2026 மகளிர் ஆசியக் கோப்பை வென்ற இந்தியா!நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டதாக தயாசிறி சர்வதேச முறைப்பாடு!இடியுடன் கூடிய மழை – அவதானமாக இருக்க அறிவுறுத்தல்!உர மோசடி விவகாரம் – அவசர விசாரணை கோரிக்கை!அப்துல் வாஹித் எம்.பி பதவி விலகினார் – தேர்தல் ஆணையத்துக்கு அறிவிப்பு!குருநாகல் மாவட்டத் தலைவராக ஜெயரத்ன ஹெரத் நியமனம்!விமான கொள்முதல் முறைகேடு – நாமல் ராஜபக்ஷவுக்கு புதிய சிக்கல்!தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாடு – எரிபொருள் நிலையங்கள் பாதிப்பு!இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2026 மகளிர் ஆசியக் கோப்பை வென்ற இந்தியா!நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டதாக தயாசிறி சர்வதேச முறைப்பாடு!
உள்ளூர்

பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

May 28, 2026 · Tamil Ceylon LK

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். 

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். 

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது

Related Stories

மேலும் ›