38 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வெளியேற நடவடிக்கை!

0

இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலா பயணிகள் தங்களின் சொந்த நாட்டிற்கு மீள செல்வதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் ஷெஹான் சுமனசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

சுற்றுலா மற்றும் ஏனைய செயற்பாடுகளுக்காக நாட்டிற்கு வருகை தந்துள்ள 38 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் நாட்டில் தங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவர்கள் தங்களின் சொந்த நாடுகளுக்கு திரும்புவதற்காக எமிரேட்ஸ் நிறுவனம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து நாளாந்தம் 4 தடவைகள் விமான சேவைகளை முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துபாய் வரை இந்த விமான சேவை முன்னெடுக்கப்படுவதாகவும் ஷெஹான் சுமனசேகர குறிப்பிட்டுள்ளார்.

தெரிவு செய்யப்பட்டுள்ள சில நாடுகளுக்கு ஶ்ரீலங்கன் விமான சேவை தனது விமான போக்குவரத்தை முன்னெடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.