5 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய கஜமுத்துக்களை வைத்திருந்த இருவர் அம்பாறை – புத்தங்கல மயானத்திற்கு அருகில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
39 மற்றும் 40 வயதுடைய சந்தேகநபர்கள் முதலிகெதர, ரன்சேகொட, அம்பகொட்டே மற்றும் கெங்கல்ல ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.
யால, குமண, உடவளவ ஆகிய சரணாலயங்களுக்குள் பிரவேசிக்கும் யானைகளைக் கொன்று, அவற்றின் தந்தங்களை வெட்டி பெற்றுக்கொண்ட கஜமுத்துக்களை சந்தேகநபர்கள் 5 கோடி ரூபாவிற்கும் மேல் விற்பனை செய்ய தயாராகியிருந்தமை விசாரணைகளில் தெரியவந்ததாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.