62 வீத மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்!

0

நாட்டில் 16 தொடக்கம் 19 வயதுக்கிடைப்பட்ட பாடசாலை மாணவர்களில் இதுவரை சுமார் 62 வீதமானோர், கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் முக்கிய அதிகாரி ஒருவரினை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, பிரித்தானியாவினால் அனுமதியளிக்கப்பட்டுள்ள அமெரிக்க தயாரிப்பான “மொல்னுபிரவீர்” மருந்தை இலங்கையில் பயன்படுத்துவது தொடர்பில் மருந்து தயாரிப்பு, விநியோகம் மற்றும் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.