மலர் பனியால் வெண்மையாக மாறிய அழகிய காலை

நுவரெலியா நகர எல்லைக்குள் உள்ள குதிரைப்பந்தய மைதானம் உள்ளிட்ட பல இடங்களிலும்,

Published March 3, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

நுவரெலியா நகர எல்லைக்குள் உள்ள குதிரைப்பந்தய மைதானம் உள்ளிட்ட பல இடங்களிலும், பட்டிப்பொல, மீபிலிமான ஆகிய பகுதிகளிலும் இன்றும் (03) அதிகாலை முதல் காலை 7.30 மணி வரை மலர் பனி (பனித்துளி) பொழிவு காணப்பட்டது.

அப்பகுதிகளில் வெப்பநிலை செல்சியஸ் 5 – 6 பாகை வரை பதிவானது.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாத இறுதி வரை நுவரெலியாவில் காணப்படும் மலர் பனி நிலைமை, இவ்வருடம் கடந்த காலங்களில் ஏற்பட்ட காலநிலை மாற்றங்களின் தாக்கத்தால் மார்ச் மாதத்தின் முதல் வாரத்திலும் காணப்படுவது சிறப்பம்சமாகும்.

நகரம் முழுவதும் உள்ள பூங்காக்களில் உள்ள செடிகளின் மேல் உப்பு தூவியதுபோல் மலர் பனி படர்ந்து காணப்பட்டமை கண்கவர் காட்சியாக இருந்தது.

இந்த அழகிய இயற்கைக் காட்சியை காண உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *