செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம் - செம்மணி, அரியாலை சித்துபாத்தி மனிதப் புதைகுழி அகழ்வில்
Published September 2, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
யாழ்ப்பாணம் – செம்மணி, அரியாலை சித்துபாத்தி மனிதப் புதைகுழி அகழ்வில் இன்று மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன் அடிப்படையில், இதுவரை 218 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இதில் 198 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 40வது நாளாக இன்று, யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


