ஒரே பாலினத்தவர் சுற்றுலா ஊக்குவிப்புத் திட்டம் ரத்து

இலங்கையில் ஒரே பாலினத்தவர் சமூகத்தை இலக்காகக் கொண்ட சுற்றுலா மேம்பாட்டு

Published March 4, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

இலங்கையில் ஒரே பாலினத்தவர் சமூகத்தை இலக்காகக் கொண்ட சுற்றுலா மேம்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்காதிருக்க இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று (04) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

இலங்கையில் ஒரே பாலினத்தவர் சமூகத்தை மையமாகக் கொண்ட சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் திட்டமொன்றுக்கு அனுமதி வழங்கி, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவரால் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றிற்கு வழங்கப்பட்ட கடிதத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *