அரிசி, மா, சீனி, ரின் மீன் உள்ளிட்ட 10 வகையான அத்தியாவசிய பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை

0

அரிசி, மா, சீனி, பருப்பு, வெங்காயம், கடலை, நெத்தலி, ரின் மீன் உள்ளிட்ட 10 வகையான அத்தியாவசிய பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலையொன்றை நிர்ணயிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இதுகுறித்த தகவலினை வெளியிட்டுள்ளார்.

இந்த கட்டுப்பாட்டு விலையை எதிர்வரும் 6 மாதங்களுக்கு அவ்வாறே அமுலில் வைத்திருப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வேலைத்திட்டத்தை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.