புகைப்பிடிப்பவர்களை கொரோனா அதிகளவில் தாக்கும் அபாயம்!

0

புகைப்பிடிப்பவர்களை கொரோனா வைரஸ் அதிகளவில் தாக்கும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் ​டெட்ரோஸ் அதனோம் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாம் நாடுகளுக்கு மாத்திரமன்றி அனைத்து மக்களுக்கும் இந்த ஆலோசனைகளை வழங்குகின்றோம்.

இந்த நிலைமையால் பலரின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. உடல், உள நலத்தை பாதுகாப்பதற்கு நாம் செயற்பட வேண்டும். ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுங்கள்.

மதுபான பாவனை மற்றும் குளிர்பானம் அருந்துவதைக் குறைக்க வேண்டும். புகைத்தல் வேண்டாம். கொவிட் – 19 தொற்றினால் புகைபிடிப்பவர்களுக்கு அதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.

முதியோர் நாளொன்றுக்கு 30 நிமிடங்களும் சிறுவர்கள் ஒரு மணித்தியாலமும் உடற்பயிற்சியில் ஈடுபடுமாறு உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரை செய்கின்றது.

வீட்டிலிருந்து பணிபுரிவதாயின் ஒரே இடத்தில் இருக்க வேண்டாம். தேவையான தகவல்களை நம்பத்தகுந்த மூலங்களிலிருந்து மாத்திரம் பெற்றுக்கொள்ளுங்கள்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.