ரஷ்ய எண்ணெய் கொள்வனவு – இந்தியாவுக்கு அனுமதி
இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் ரஷ்ய எண்ணெயை கொள்வனவு....
Published March 6, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் ரஷ்ய எண்ணெயை கொள்வனவு செய்வதற்கு அனுமதி அளிக்கும் வகையில், அமெரிக்கா இந்தியாவிற்கு 30 நாட்கள் சலுகை காலத்தை வழங்கியுள்ளது.
அமெரிக்க திறைசேரி திணைக்களத்தின் வெளிநாட்டு சொத்துக்கள் கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ள அனுமதியில், 2026 மார்ச் 5 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ரஷ்ய கூட்டமைப்பிற்கு சொந்தமான மசகு எண்ணெய் மற்றும் எரிபொருளை இந்தியாவிற்குள் விநியோகிப்பதற்கும் விற்பனை செய்வதற்கும் அனுமதி வழங்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, தொடர்புடைய வர்த்தக நடவடிக்கைகளை எதிர்வரும் ஏப்ரல் 3 ஆம் திகதி வரை மேற்கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.