உயர்தர தொழிற்கல்விக்கு விண்ணப்பங்கள் கோரல்
2026/2027 ஆம் ஆண்டுக்கான 12 ஆம் தர தொழிற்கல்விப் பிரிவு பாடநெறிகளுக்கு........
Published March 6, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
2026/2027 ஆம் ஆண்டுக்கான 12 ஆம் தர தொழிற்கல்விப் பிரிவு பாடநெறிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மாணவர்களை இணைத்துக் கொள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளைக் கருத்திற் கொள்ளப்படாது. 2025, 2026 அல்லது கடந்த மூன்று ஆண்டுகளில் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் தமது பிரதேசத்தில் இப்பாடநெறியைக் கொண்ட பாடசாலைகளில் இணைந்து கொள்ளலாம்.
மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில் 12 ஆம் தரத்தில் மென் திறன்கள் (Soft Skills) மற்றும் அடிப்படைத் தொழிற்பயிற்சிகள் வழங்கப்படும்.