இலங்கை – ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு
மத்திய கிழக்கில் தற்போது ஏற்பட்டுள்ள போர்ச் சூழலைக் கருத்திற்கொண்டு.......
Published March 7, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
மத்திய கிழக்கில் தற்போது ஏற்பட்டுள்ள போர்ச் சூழலைக் கருத்திற்கொண்டு, இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெறவிருந்த கிரிக்கெட் தொடர் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 இருபதுக்கு 20 போட்டிகளைக் கொண்ட இத்தொடர், ஆப்கானிஸ்தான் அணியின் உபசரிப்பில் ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜா மற்றும் டுபாயில் நடைபெறவிருந்தது.
இருபதுக்கு 20 தொடருடன் ஆரம்பமாகவிருந்த இத்தொடரின் முதலாவது போட்டி, எதிர்வரும் 13ஆம் திகதி சார்ஜாவில் நடைபெறவிருந்தது.