தங்கக் கடத்தல் : இருவர் கைது
இன்று யாழ்ப்பாணத்தில் இருந்து மாதகல் கடல் வழியாக இந்தியாவிற்கு.........
Published March 9, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இன்று யாழ்ப்பாணத்தில் இருந்து மாதகல் கடல் வழியாக இந்தியாவிற்கு படகொன்றில் தங்கம் கடத்தி செல்லப்படுவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த படகினை கடலில் வழிமறித்து கடற்படையினர் சோதனையிட்ட வேளை படகில் இருந்து 6 கிலோ 85 கிராம் தங்க கட்டிகளை மீட்டுள்ளனர். அதனை அடுத்து படகில் இருந்து இருவரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் , மீட்கப்பட்ட தங்கத்தையும் , தங்கத்தை கடத்தி செல்ல பயன்படுத்தப்பட்ட படகினையும் மேலதிக நடவடிக்கைக்காக காங்கேசன்துறை சுங்க அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.