திக்கோவிட்ட துறைமுகத்தில் பிடிபட்ட மீன்பிடி படகு
இலங்கை கடற்படையினரால் அண்மையில் நாட்டின் தெற்கு கடற்பரப்பில்..........
Published March 13, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இலங்கை கடற்படையினரால் அண்மையில் நாட்டின் தெற்கு கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட பலநாள் மீன்பிடி படகில் இருந்து 654 கிலோகிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த போதைப்பொருள் தொகையுடன் அந்த மீன்பிடி படகு நேற்று (12) முற்பகல் திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது மொத்தம் 654 கிலோகிராம் போதைப்பொருள் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.
அவற்றில் 478 கிலோகிராம்ைஐஸ் போதைப்பொருள் எனவும், ஏனைய 176 கிலோகிராம் ஹெரோயின் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.