இன்று முதல் மீண்டும் QR முறையில் எரிபொருள் விநியோகம்
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் மற்றும் நாட்டில்..........
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் மற்றும் நாட்டில் எரிபொருளுக்கான தேவை அசாதாரணமாக அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR Code) முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வலுசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி, இன்று காலை 6.00 மணி முதல் QR குறியீட்டு முறை கட்டாயமாக்கப்படுவதாக அமைச்சு அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர் நிலைமை காரணமாக எரிபொருள் விநியோக மார்க்கங்கள் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டு வருவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், நாட்டில் எரிபொருளுக்கான தேவை அசாதாரணமாக அதிகரித்துள்ள நிலையில், பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகக் கையிருப்பில் உள்ள எரிபொருளை மிகவும் அவதானமாகக் கையாள வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலர் சட்டவிரோதமான முறையில் எரிபொருளைப் பதுக்கி வைக்கும் மோசடிகளில் ஈடுபடுவதே இந்த அசாதாரண கேள்வி அதிகரிப்புக்குப் பிரதான காரணம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவ்வாறான மோசடிகளைத் தடுத்து, மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் பொருளாதார நடவடிக்கைகளைத் தடையின்றி முன்னெடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.