கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இத்தாலியில் ஒரே நாளில் 793 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து அங்கு, மொத்த உயிரிழப்புக்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தை தாண்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 188 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில் உலகம் முழுவதும் இதுவரை 3 இலட்சத்து 8 ஆயிரத்து 231 பேருக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 13 ஆயிரத்து 67 பேர் உயிரிழந்துள்ளனர்.