இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்
மத்திய, சப்ரகமுவ, தெற்கு, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின்.....
Published March 16, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
மத்திய, சப்ரகமுவ, தெற்கு, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மாலை 2:00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அதேநேரம் கிழக்கு மாகாணத்தில் சிறிய அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.