யாழ்.கொடிகாமத்தில் 233 பேரை தனிமைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை!

0

இந்தியா சென்ற 233 யாத்திரிகள் யாழ் கொடிகாமம் 522வது படைப்பிரிவு முகாமில் தங்கவைத்து கண்காணிக்க  நடவடிகை எடுக்கப்பட்டுள்ளது.

இன்று(ஞாயிற்றுக்கிழமை) 8 பேருந்துகளில் அழைத்து வரப்பட்ட இவர்கள் குறித்த பகுதியில் வைத்து பராமரிக்கப்பட்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

14 நாட்கள் குறித்த நபர்கள் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்பு அமைச்சு மற்றும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் என்பன இணைந்து அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைக்க மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தியிருந்தது.

அதனடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு உரிய கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் கொடிகாமம் 522ஆவது படைப்பிரிவின் படை முகாமில் 500 பேரை தங்கவைக்கக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்கு கிளிநொச்சி இரணைமடு விமானப்படை முகாமில் 172 பேர் தங்க வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.