ஈரான் எரிசக்தி மையங்கள் மீதுஏவுகணை தாக்குதல்
ஈரானுக்குச் சொந்தமான 'தெற்கு பார்ஸ்' இயற்கை எரிவாயு வயல்......
Published March 19, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
ஈரானுக்குச் சொந்தமான ‘தெற்கு பார்ஸ்’ இயற்கை எரிவாயு வயல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள எரிசக்தி நிலையங்கள் மீது ஈரான் பாதுகாப்புப் படைகள் தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயலான ஈரானின் தெற்கு பார்ஸ் பகுதி மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், அந்த எரிவாயு வயலுக்கு அருகில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இத்தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன், அமெரிக்கா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் இந்தத் தாக்குதலின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எச்சரித்துள்ளார்.