QR குறியீடு சிக்கல்களுக்கு தீர்வு : பிமல்
எரிபொருள் QR குறியீட்டைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்களை......
Published March 19, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
எரிபொருள் QR குறியீட்டைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளவர்களுக்கு இன்றைய தினத்திற்குள் தீர்வுகள் வழங்கப்படும் என்றும், நாளை காலைக்குள் இப்பிரச்சினை முழுமையாகத் தீர்க்கப்படும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, சில மாவட்டங்களில் சாதாரண எரிபொருள் நுகர்வை விட இருமடங்கு நுகர்வு பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.