சட்டவிரோதமான முறையில் வெளிநாடு சென்று மீண்டும் நாடு திரும்பியவர்கள் தங்களை பதிவு செய்வது கட்டாயமானது இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொரோனா வைரஸின் ஆபத்தான தன்மையையும் சமுகப்பொறுப்பினையும் கருத்திற் கொண்டு மேற்படி தரப்பினர் செயற்பட வேண்டும்.
மேலும் வெளிநாட்டிற்கு சென்றமைக்கான காரணம் அல்லது, அங்கிருந்து நாட்டிற்கு திரும்பியமைக்கான காரணம், நாட்டிலிருந்து வெளியேறியமை மற்றும் உட்பிரவேசித்தமை தொடர்பாக எவ்விதமான ஆராய்வுகளும் மேற்கொள்ளப்படமாட்டாது.
சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்ற அச்சம் காரணமாக தயகத்தில் உள்ளவர்கள் அவற்றை விடுத்து அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
கொரோனா வைரஸின் தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்காக இராணுவத்தினர் அர்ப்பணிப்புடன் செயற்படும் அதேநேரம் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டியது அவசியமானது“ எனக் குறிப்பிட்டுள்ளார்.