அத்தியாவசிய சேவைகள் இடையூறில்லாமல் தொடரும் : பிரதமர்
நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அத்தியாவசிய சேவைகள்...........
Published March 20, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அத்தியாவசிய சேவைகள், பொதுப் பயன்பாடுகள் மற்றும் கைத்தொழில்கள் தடையின்றி இயங்குவதை உறுதிப்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பொதுமக்களின் நலனுக்காக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
உலகளாவிய தொற்றுநோய், பொருளாதார வீழ்ச்சி மற்றும் அரசியல் நெருக்கடிகளில் இருந்து மீண்டு வரும் வேளையில், எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தைக் கவிழ்க்க முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.