ஈராக் மீது வானூர்தி தாக்குதல் !
வடக்கு ஈராக்கிய நகரமான எர்பிலில் உள்ள இஸ்ரேலிய.......
Published March 23, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
வடக்கு ஈராக்கிய நகரமான எர்பிலில் உள்ள இஸ்ரேலிய உளவுப்பிரிவான ‘மொசாட்’ அலுவலகத்தை இலக்கு வைத்து இன்று அதிகாலை ஆளில்லா வானூர்தி மூலம் தாக்குதல் நடத்தியதாக ஈரான் ஆதரவு ‘அஷாப் அல்-கஹ்ஃப்’ ஆயுதக்குழு தெரிவித்துள்ளது.
தங்களது உத்தியோகபூர்வ டெலிகிராம் (Telegram) செனலில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தாக்குதலை அந்த அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
அத்துடன், ஈராக் முழுவதும் பரவியுள்ள அமெரிக்க இராணுவத் தளங்களிலிருந்து பொதுமக்கள் விலகி இருக்குமாறும் அந்த அமைப்பு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.