நியூயோர்க்கில் எயார் கனடா வானூர்தி விபத்து

நியூயோர்க்கின் லாகார்டியா வானூர்தி நிலையத்தில் நேற்று..........

Published March 23, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

நியூயோர்க்கின் லாகார்டியா வானூர்தி நிலையத்தில் நேற்று இரவு மாண்ட்ரியலில் இருந்து புறப்பட்ட எயார் கனடா எக்ஸ்பிரஸ் (Air Canada Express) வானூர்தி ஒன்று ஓடுபாதையில் தீயணைப்பு வாகனத்துடன் மோதி பாரிய விபத்துக்குள்ளானது.

ஜாஸ் ஏர்லைன்ஸ் (Jazz Aviation) நிறுவனத்தால் இயக்கப்படும் போம்பார்டியர் CRJ-900 ரகத்தைச் சேர்ந்த இந்த வானூர்தி, ஓடுபாதை 4இல் (Runway 4) தரையிறங்கிய போது சுமார் 39 கி.மீ வேகத்தில் அங்கு நின்றிருந்த தீயணைப்பு வாகனத்துடன் (Truck 1) மோதியுள்ளது.

இந்தக் கோர விபத்தில் தீயணைப்பு வாகனத்தில் இருந்த துறைமுக அதிகார சபையின் நான்கு தீயணைப்பு வீரர்கள் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உலகம் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *