அமைச்சர் குமார ஜயகொடியின் கோரிக்கை……
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு.........
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ,மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான காலப்பகுதியில் மின்சாரத்தை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கம்பஹா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது , மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். முடிந்தவரை ஒரு மின்விளக்கையாவது அணைத்துவிட்டு, உங்களால் இயன்ற ஆதரவை வழங்குங்கள்.
அந்த நேரத்தில்தான் மின்சார உற்பத்திக்கு அதிக எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. பகல் நேரங்களில் பிரச்சினை இல்லை.
இரவில் பிரஜைகளாக நாம் அந்த ஆதரவை வழங்க வேண்டும். ஏனென்றால், அதன் சுமை இறுதியில் நமக்கும் மக்களுக்கும் தான் வந்து சேரும்.
மக்களுக்குத் தொந்தரவு ஏற்படாத வகையில் அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான மின்சாரம் மற்றும் எரிபொருளை வழங்குவதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும்.