தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உள்ளிட்ட சிலருக்கு அழைப்பாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் கல்முனை நீதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சாணக்கியன் உள்ளிட்ட ஏழு பேருக்கு இவ்வாறு அழைப்பாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கல்முனை நீதிமன்றம் அழைப்பாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதிமன்றின் உத்தரவினை மீறி போராட்டத்தில் பங்கேற்றதாக இவர்களுக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்கக்கூடாது என சுமார் 29 பேருக்கு எதிராக நீதிமன்றில் பொலிஸார் தடையுத்தரவுகளை பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும், சாணக்கியன் உள்ளிட்ட ஏழு பேர் தடையுத்தரவினை மீறி போராட்டத்தில் பங்கேற்றனர்.
இதன் அடிப்படையில் சாணக்கியன் உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக இவ்வாறு நீதிமன்றம் அழைப்பாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.