மார்ச் மாதத்தில் எரிபொருள் விலையில் மாற்றமில்லை
மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தம்......
Published March 28, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தம் இந்த மாதம் மேற்கொள்ளப்படமாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு இந்தத் தகவலை வெளியிட்டார்.
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாகக் கொண்டு, விலை திருத்தம் தொடர்பான தீர்மானத்தை அரசாங்கம் எதிர்காலத்தில் எடுக்கும் எனத் தலைவர் மேலும் தெரிவித்தார்.