RCB அபார வெற்றி !
கிரிக்கெட் இரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், 19ஆவது..........
கிரிக்கெட் இரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், 19ஆவது IPL 2026 தொடர் பெங்களூரு சின்னசாமி விளையாட்டரங்கில் இன்று கோலாகலமாகத் தொடங்கியது
இத்தொடரின் முதல் போட்டியில் நடப்புச் செம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.
இதனைத் தொடர்ந்து 202 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி, ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. விராட் கோலி 69 ஓட்டங்களையும், தேவ்தத் படிக்கல் 61 ஓட்டங்களையும் விளாச, ஆர்சிபி அணி 15.4 ஓவர்களிலேயே 203 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் நடப்புச் சாம்பியன் பெங்களூரு அணி இந்த பருவத்தை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.