கொழும்பு, கம்பஹா, களுத்துறை அதிக அபாய வலையங்களாக பிரகடனம்

0

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்கள் அதிக அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையிலேயே ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டின் சில பகுதிகளில் தளர்த்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று(செவ்வாய்கிழமை) நண்பகல் 2 மணி முதல் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தளர்த்தப்பட்டிருந்த ஊரங்கு சட்டமே இவ்வாறு மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரும் வரை அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.