யாழ் இளைஞர்களை இன்று சந்திக்கின்றார் சாணக்கியன்!

0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் யாழ் மாவட்ட இளைஞர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

யாழ்ப்பாணம், நீராவியடியிலுள்ள இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை 2 மணிக்கு இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

சமகால அரசியல் தொடர்பான இளைஞர்களின்(வடலிகளின்) எதிர்பார்ப்பு எனும் தொனிப்பொருளில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.