முதல் போட்டியில் இலங்கை தரமான வெற்றி !

சிம்பாப்வே - இலங்கை அணிகளுக்கிடையிலான...

Published September 4, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

சிம்பாப்வே – இலங்கை அணிகளுக்கிடையிலான ஹராரே விளையாட்டு மைதானத்தில் நேற்று (03) நடைபெற்ற முதலாவது சர்வதேச T20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றது.

சர்வதேச T20 கிரிக்கெட் வரலாற்றில் சிம்பாப்வே மண்ணில் விளையாடிய முதல் சந்தர்ப்பத்திலேயே இலங்கை வெற்றியை சம்பாத்தித்துக்கொண்டது.

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித் தலைவர் சரித் அசலங்க முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தார்.

அதற்கமைய, சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாடி 175 ஓட்டங்களை பெற்றது. அணி சார்பில்,

ப்றயன் பெனெட் 81 ஓட்டங்கள், அணித்தலைவர் சிக்கந்தர் ராசா 28 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.

சிம்பாப்வேயினால் நிர்ணயிக்கப்பட்ட 176 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 19.1 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் பெத்தும் நிஸ்ஸங்க 55 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஷ் ஆட்டமிழக்காது 41 ஓட்டங்களையும், குஷல் மெண்டிஸ் 38 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்து அணியின் வெற்றிக்கு பங்காற்றினர்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers விளையாட்டு and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *