பல்கலைக்கழகங்களை மீள திறக்கும் திகதி அறிவிக்கப்பட்டது!

0

நாட்டில் அனைத்து பல்கலைக்கழகங்களையும் எதிர்வரும் 27ம் திகதி திறக்கவும் இரண்டாம் தவணை விடுமுறை காலத்தை ஒரு வார காலத்திற்கு மட்டுப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

தேசிய பரீட்சைகளுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும் ஆகையால் அதிக நாட்கள் விடுமுறை வழங்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

கோவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் அறிவுறுத்தப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை பாடசாலை, பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிறுவனங்களில் பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பல்வேறுப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழங்களையும் எதிர்வரும் 27ம் திகதி திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர் விடுதிக்குள் சமூக இடைவெளியை பேணுவது சவால்மிக்கது.

பல்கலைககழக மாணவர் விடுதிகள் வளப்பற்றாக்குறை காணப்படுகிறது. ஆகையால் பல்கலைக்கழக மாணவர்களில் 3ம் மற்றும் 4ம் வருட மாணவர்களை மாத்திரம் முதற்கட்டமாக மாணவர் தங்குமிட விடுதிக்கள் உள்வாங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முதலாம் மற்றம் இரண்டாம் வருட மாணவர்களுக்கான வகுப்புக்களை ஆரம்பிப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.