ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து உணரப்பட்ட நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானின் தொலைதூர தென்கிழக்கு பகுதியில் நேற்று இரவு 5.6 ரிக்டர்

Published September 5, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

ஆப்கானிஸ்தானின் தொலைதூர தென்கிழக்கு பகுதியில் நேற்று இரவு 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ஆறு நாட்களில் அங்கு ஏற்பட்ட மூன்றாவது நிலநடுக்கம் என்பதோடு, முதல் நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது.

உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 08:56 மணிக்கு ஏற்பட்ட அண்மைய நிலநடுக்கத்தால் நங்கர்ஹார் மற்றும் குனார் மாகாணங்களில் உள்ள மக்கள் அச்சத்தில் தங்குமிடங்களை விட்டு வெளியேறினர்.

இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து உடனடி அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் இல்லை.

ஆனால், காயமடைந்த 17 பேர் குனார் மாகாண வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உலகம் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *