அம்பாறையில் சர்வதேச நீதி கோரி கையெழுத்துப் போராட்டம்

செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள மனித புதைகுழிகளுக்கானதும்

Published September 5, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள மனித புதைகுழிகளுக்கானதும் நடைபெற்ற இனப் படுகொலைகளுக்குமான சர்வதேச நீதி கோரிய கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர மத்தியில் ஸ்ரீ அம்பலத்தடி பிள்ளையார் ஆலயம் முன்பாக நேற்று மாலை இந்த கையெழுத்து சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்தக் கையெழுத்து போராட்டத்தை தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரன், முருகேசு சந்திரகுமார், சுரேஷ் பிரேமசந்திரன், காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன், கல்முனை மாநகர சபையின் முன்னாள் எதிர்கட்சி தலைவர் ஹென்றி மகேந்திரன், இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் செயலாளரும் கல்முனை தொகுதி இணைப்பாளருமான அருள். நிதான்சன், சமூக சேவையாளர் இரா. பிரகாஷ் உட்பட தமிழ் தேசிய கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *