வாகனங்கள் மற்றும் நபர்களை சோதனைக்கு உட்படுத்தப்படும் போதும், தனிமைப்படுத்தல் சட்டம் அமலாக்கப்படும் போதும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்படுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு பொலிஸ் மாஅதிபர், பொலிஸ் அதிகாரிகளுக்கு கடிதமொன்றின் ஊடாக அறிவித்துள்ளார்.
பொதுமக்களை நோக்கி, தேவையற்ற வார்த்தை பிரயோகங்களை வெளியிட வேண்டாம் என அவர் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
பொதுமக்கள் சிரமப்படும் வகையில் செயற்படுவதை நிறுத்திக்கொள்ளுமாறும், பொலிஸ் மாஅதிபர், பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அறிவித்துள்ளார்.
பொதுமக்களை சிரமப்படும் வகையில் பொலிஸ் அதிகாரிகள் செயற்படும் விதம் ஊடகங்களில் வெளியாகும் பட்சத்தில், குறித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று, கண்காணிப்பு குறைவு என்ற அடிப்படையில் உயர் அதிகாரிகளுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மாஅதிபர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.