நாடு தற்போது கோவிட் என்ற வெடி குண்டுக்கு அருகில் இருப்பதாக கொழும்பு கிழக்கு வைத்தியசாலையின் விசேட மருத்துவ நிபுணர் மயூர தேவோலகே தெரிவித்துள்ளார்.
இது கர்ப்பிணி தாய்மாருக்கும் மிகவும் பாரதூரமான ஆபத்து எனவும் அனைத்து கர்ப்பிணி தாய்மாருக்கும் கோவிட் வைரஸ் தொற்றினால், அவர்களில் 500 பேர் வரை உயிரிழக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனால் உடனடியாக கர்ப்பிணி தாய்மாருக்கு கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும். நாட்டின் சுகாதார துறையினரை இதற்காக தயார்ப்படுத்த வேண்டும்.
மருத்துவர்களுக்கான விபரங்கள் அடங்கிய களஞ்சியம் இல்லை. சுகாதார அமைச்சுக்கு சரியான நடைமுறைகள் எதுவும் இல்லை.
உலகில் மிகவும் செயற்திறன் அற்ற நிறுவனமாக இலங்கை சுகாதார அமைச்சை பெயரிடலாம் எனவும் தேவோலகே குறிப்பிட்டுள்ளார். சிங்கள வலையெளி தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.